அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

மீண்டும் தொடங்கிய அமர்நாத் யாத்திரை!

கனமழை, நிலச்சரிவு காரணமாக கடந்த மூன்று நாள்களாகத் தடைப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை இன்று காலை மீண்டும் தொடங்கியது. 

News image

கோப்புப் படம்.

Updated On :11 ஜூலை 2023, 11:50 am

கனமழை, நிலச்சரிவு காரணமாக கடந்த மூன்று நாள்களாகத் தடைப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை இன்று காலை மீண்டும் தொடங்கியது. 

ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகரின் பாந்தா சௌக் அடிப்படை முகாமில் இருந்து இன்று காலை  பம் பம் போலே, ஹர ஹர மகாதேவ் என்ற கோஷத்துடன் உற்சாகமாக பக்தர்கள் குழு புறப்பட்டுச் சென்றது. 

கடந்த ஜூலை 7-ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் கனமழையை தொடர்ந்து மோசமான வானிலை நிலவி வந்ததையடுத்து, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மூன்று நாள்களாக நிறுத்தப்பட்ட யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது. 

Story image

அமர்நாத் யாத்திரை ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், யாத்திரை தொடங்கி இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.