
அசாமிலிருந்து கன்னியாகுமரி புறப்பட்ட திப்ரூகர் - கன்னியாகுமரி விரைவு ரயிலில் திடீரென்று புகை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒடிஸாவின் பிரம்மாபூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது புகை வந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். ரயிலின் பிரேக்கில் ஏற்பட்ட பழுது காரணமாக புகை வந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ரயிலில் இருந்து புகை வந்ததால், ரயிலில் இருந்த பயணிகள் அவசரமாக கீழே இறங்கி ஓடினர். அரைமணி நேரத்துக்கு பின்னர் சூழல் சீரான பிறகு ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது.
புகை வந்தவுடன் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, தீ பிடிக்கமால் தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







