ஆந்திரம் உள்பட 3 மாநிலங்களிலிருந்து தக்காளி கொள்முதல்: மத்திய அரசு உத்தரவு!

தக்காளி விலை உயர்வையடுத்து ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தக்காளி விலை உயர்வையடுத்து ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ. 100-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. 

இதையடுத்து தக்காளி விலையைக் குறைக்கும்பொருட்டும் தக்காளி அனைத்து பகுதிகளிலும் சீராக விநியோகிக்கும் பொருட்டும் மத்திய அரசு முக்கிய உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. 

தக்காளி அதிகம் விளையக்கூடிய ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகியவற்றின் மண்டிகளில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யுமாறு தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பிற்கும், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பிற்கும் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை உத்தரவிட்டுள்ளது. 

தலைநகர் தில்லியில் வெள்ளிக்கிழமை முதல் சில்லறை விற்பனையகங்கள் மூலமாக மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அதிகம் தேவைப்படும் பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் பகுதிகளில் சலுகை விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நாள்களில் நாசிக், ஒளரங்காபாத், மத்திய பிரதேசத்தில் இருந்து கூடுதல் தக்காளிகள் அனுப்பப்படவிருப்பதால் கூடிய விரைவில் தக்காளி விலை குறையுமென்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com