பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கேரளத்தில் கனமழை: 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

கேரளத்தில் கனமழை பெய்து வருவதால் இன்றும், நாளையும் மிகக் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை அம்மாநில வானிலை ஆய்வுமையம் விடுத்துள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :13 ஜூலை 2023, 10:20 am

DIN

கேரளத்தில் கனமழை பெய்து வருவதால் இன்றும், நாளையும் மிகக் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை அம்மாநில வானிலை ஆய்வுமையம் விடுத்துள்ளது. 

கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடர்ந்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கேரளத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, திரிச்சூர், கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிகக் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. 

ஜூலை 14-ல் இடுக்கி, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.