மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ஹிமாசல்: விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் நிவாரணப் பொருள்கள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், வட மாநிலங்களை கனமழையும், வெள்ளமும் புரட்டிப்போட்டுள்ளது.

News image
Updated On :14 ஜூலை 2023, 12:50 pm

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், வட மாநிலங்களை கனமழையும், வெள்ளமும் புரட்டிப்போட்டுள்ளது.

வட மாநிலங்களில் ஹிமாசலப்பிரதேசமும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தரை வழியாக அணுக முடியாத பல்வேறு பகுதிகளில், விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

குள்ளு துணை ஆணையர் அஷுதோஷ் கார்க் கூறுகையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தாமதமாகத் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை தற்போது பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. முக்கியமாக, கேரளம், கா்நாடகம், வடமாநிலங்களான தில்லி, ஹிமாசல், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால், யமுனை உள்ளிட்ட நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

கனமழை பெய்த பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீா் குளம் போலத் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வசிப்பிடங்களிலும் மழைநீா் தேங்கியுள்ளது. கனமழை சூழலை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகளை உள்ளூா் அதிகாரிகள் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.

ஹிமாசலில் நிலச்சரிவு
கனமழை காரணமாக ஹிமாசலின் சிம்லா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் போ் உயிரிழந்தனா். மாநிலத்தின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 300-க்கும் அதிகமானோா் பல இடங்களில் சிக்கியுள்ளனா். அவா்களை மீட்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

யமுனையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் புது தில்லியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை தலைநகர் சந்திக்காததொரு வெள்ளப்பெருக்கில் நகரமே சிக்கித் தவிக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.