சிவிங்கிப் புலிகள் இடமாற்றம் செய்யப்பட மாட்டா: மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் 

குனோ பூங்காவில் இருந்து சிவிங்கிப் புலிகள் இடமாற்றம் செய்யப்படாது  என்று மத்திய தொழிலாளர் நலன், வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
சிவிங்கிப் புலிகள் இடமாற்றம் செய்யப்பட மாட்டா: மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் 

குனோ பூங்காவில் இருந்து சிவிங்கிப் புலிகள் இடமாற்றம் செய்யப்படாது  என்று மத்திய தொழிலாளர் நலன், வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப்புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் லட்சியத் திட்டத்தின்கீழ், நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகளும் (5 பெண், 3 ஆண்), தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகளும் (7 ஆண், 5 பெண்) கொண்டுவரப்பட்டு, குனோ தேசியப் பூங்காவில் விடப்பட்டன. இதில், ‘சாஷா’ எனும் பெண் சிவிங்கிப் புலி சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த மாா்ச் மாதம் உயிரிழந்தது. 

பின்னா், ‘உதய்’ எனும் ஆண் சிவிங்கிப் புலி கடந்த ஏப்ரல் மாதமும், ‘தக்ஷா’ என்ற பெண் சிவிங்கிப் புலி கடந்த மே மாதமும் இறந்தன. இதனிடையே, ஜ்வாலா என்ற பெண் சிவிங்கிப் புலி, குனோ பூங்காவில் ஈன்றிருந்த 4 குட்டிகளில், 3 குட்டிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. கடந்த செவ்வாய்க்கிழமை, தேஜஸ் என்ற 4 வயது ஆண் சிவிங்கிப் புலி, தனது வாழ்விடத்தில் இறந்தது. 

இதனிடையே தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட சுராஜ் என்ற ஆண் சிவிங்கிப் புலி வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். வேலியிடப்பட்ட வாழ்விடத்தில் இருந்து, வனத்துக்குள் விடப்பட்டிருந்த இந்த சிவிங்கிப் புலியின் உடலில் காயங்கள் காணப்படுகின்றன. அதன் இறப்புக்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஆளும் பாஜகவின் தவறான நிர்வாகம் காரணமாகவே சிவிங்கிப் புலிகள் உயிரிழப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. 

இந்த நிலையில் குனோ பூங்காவில் இருந்து மற்ற சிவிங்கிப் புலிகள் இடமாற்றம் செய்யப்படுமா என்கிற கேள்விக்கு அவை குனோவில் மட்டுமே இருக்கும் என்றும் அவை மத்திய பிரதேசத்தில் மட்டுமே பராமரிக்கப்படும் என்றும் மத்திய தொழிலாளர் நலன், வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, "நாங்கள் சர்வதேச நிபுணர்களையும் தொடர்பு கொள்கிறோம். 

எங்கள் குழு சென்று நிலைமையை மதிப்பாய்வு செய்யும். சாத்தியமான அனைத்து அம்சங்களையும் நாங்கள் பார்த்து வருகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com