பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

எதிர்க்கட்சிகள் கூட்டம்: சரத் பவார் பங்கேற்கவில்லை

பெங்களூருவில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் சரத்பவார் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :17 ஜூலை 2023, 4:35 am

DIN

பெங்களூருவில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் சரத்பவார் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிா்கொள்ள, எதிா்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா் முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு 16 கட்சிகள் அழைக்கப்பட்டிருந்தன. 

அதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,  ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதனிடையே எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு 24 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் சரத்பவார் இன்று பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இரண்டாவது நாள் கூட்டத்தில் சரத்பாரும் அவரது மகள் சுப்ரியா சுலேவும் பங்கேற்க உள்ளனர்.

இத்தகவலை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபசே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.