கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

எதிரணியினரை பிளவுபடுத்த மோடி அரசு பயன்படுத்தும் ஸ்கிரிப்ட்: கார்கே கண்டனம்

அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனைக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.  

News image

கோப்புப்படம்

Updated On :17 ஜூலை 2023, 6:41 am

DIN

அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனைக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.  

உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறது. இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனைகளை நாங்கள் கண்டிக்கிறோம். எதிரணியினரை மிரட்டுவதற்கும் பிளவுபடுத்துவதற்கும் மோடி அரசின் யூகிக்கக்கூடிய ஸ்கிரிப்டாக இது மாறிவிட்டது. 

ஆச்சரியம் என்னவென்றால், சித்தாந்த ரீதியாக எதிர்க்கும் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியத்தில் பாஜக திடீரென முனைப்பு காட்டி வருகிறது. மோடி அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிராக ஒரே எண்ணம் கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டுள்ளன. ஜனநாயகத்தை மிதிக்க இந்த கோழைத்தனமான தந்திரங்களுக்கு எதிர்க்கட்சிகள் தடுமாறக் கூடாது' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.