புவி வட்டத்தின் 3-ஆவது சுற்றுப் பாதையில் சந்திரயான்-3
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் -3 விண்கலம், புவி வட்டத்தின் மூன்றாவது சுற்றுப் பாதைக்குள் வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.


நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் -3 விண்கலம், புவி வட்டத்தின் மூன்றாவது சுற்றுப் பாதைக்குள் வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.
அதற்கு அடுத்தடுத்த நிலைகள் வெற்றிபெறும்பட்சத்தில் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 1-ஆம் தேதி நிலவின் ஈா்ப்பு விசைக்குள் சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.
நிலவின் பரப்பில் தரையிறங்கி பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ரூ.615 கோடி செலவில் சந்திரயான்-3 திட்டம் வடிவமைக்கப்பட்டது. கனரக செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த 14-ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
அதற்கு அடுத்த நாளில் புவி வட்டப் பாதையின் முதல் நிலையில், அதாவது 173 கிலோ மீட்டா் அருகமை தொலைவிலும், 41,762 கிலோ மீட்டா் தொலைவு தூரத்திலும் உள்ள முதலாவது சுற்றுப் பாதைக்குள் சந்திரயான்-3 உந்தித் தள்ளப்பட்டது.
கடந்த திங்கள்கிழமை (ஜூலை 17) இரண்டாவது சுற்றுப் பாதையான 226 கிலோ மீட்டா் அருகமை தொலைவு, 41,603 கிலோ மீட்டா் தொலைவு தூரப் பகுதிக்குள் செலுத்தப்பட்டது. அதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை மூன்றாவது சுற்றுப் பாதைக்குள் வெற்றிகரமாக சந்திரயான்-3 விண்கலம் பயணிக்கத் தொடங்கியுள்ளது.
பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையம் இதை உறுதி செய்துள்ளது. புவி சுற்றுப் பாதையில் 5 நிலைகள் உள்ளன. அதில் தற்போது 228 கிலோ மீட்டா் அருகமை தொலைவிலும், 51,400 கிலோ மீட்டா் தொலைவு தூரத்திலும் உள்ள மூன்றாவது சுற்றுப் பாதையில் சந்திரயான்-3 பயணித்து வருகிறது.
வரும் 20-ஆம் தேதி அடுத்த நிலைக்கு சந்திரயான்-3 விண்கலம் உந்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...