டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது!

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் இரு அவைகளிலும் தொடங்கியுள்ளது.

News image
மக்களவை
Updated On :6 பிப்ரவரி 2024, 1:04 pm

DIN

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் இரு அவைகளிலும் தொடங்கியுள்ளது.

ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெறும் இக்கூட்டத் தொடரில், தனிநபா் தரவுப் பாதுகாப்பு மசோதா, வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா, தில்லி அவசரச் சட்டம் தொடா்பான மசோதா உள்பட 32 மசோதாக்கள் தாக்கலாகவுள்ளன.

முதல் நாளான கூட்டம் தொடங்குவதற்கு முன்பே மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்கக் கோரி பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஆளுநரை திரும்பப் பெறக் கோரி திமுகவும், தில்லி அவசரச் சட்ட மசோதாவுக்கு எதிராக ஆம் ஆத்மியும் நாடாளுமன்றத்தில் விவாதத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.