கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த வன்கொடுமை... பொதுமக்கள் போராட்டம்.!

மணிப்பூரில் பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மாற்று சமூகத்தை சேர்ந்த ஒரு குழுவினர் ஆடைகளை அகற்றி இழுத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை நடத்திய சம்பவத்திற்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்

News image
Updated On :21 ஜூலை 2023, 8:35 am

DIN


மணிப்பூரில் பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மாற்று சமூகத்தை சேர்ந்த ஒரு குழுவினர் ஆடைகளை அகற்றி இழுத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை நடத்திய சம்பவத்திற்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மணிப்பூரில் பெரும்பான்மை மைதேயி சமூகத்தினருக்கும், பழங்குடியின குகி சமூகத்தினருக்கும் இடையேயான மோதல் வன்முறையாக உருவெடுத்துள்ளது. இந்த வன்முறைக்கு மத்தியில் கடந்த மே 4-ஆம் தேதி ஒரு சமூகத்தைச் சோ்ந்த ஆண்கள் திரளாகக் கூடி, மற்றொரு சமூகத்தைச் சோ்ந்த இரு பெண்களை ஆடைகள் ஏதுமின்றி சாலையில் அடித்து இழுத்துச் செல்லும் விடியோ காட்சி அண்மையில் சமூக வலைதளங்களில் பரவியது. தடுக்க முயன்ற அவரது சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், விடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பெண்களை ஆடைகளின்றி அழைத்துச் சென்ற கும்பலின் முக்கிய குற்றவாளி உட்பட 4 பேரை மணிப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் விதிமீறல்கள் தொடர்பாக 657 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. குற்றவாளிகளை பிடிப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

இது தொடா்பாக மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கே, "பெண்களை அவமதிக்கும் வகையிலும் மனிதத்தன்மையற்ற வகையிலும் இந்த கொடூரமான குற்றத்தை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், சட்டத்தின்படி அவா்களுக்கு முன்மாதிரியான தண்டனை வழங்கவும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபியிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். 

இந்த நிலையில் இரண்டு பெண்களை ஆடைகளை அகற்றி இழுத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை நடத்திய சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள் நீதி கேட்டு வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போலீசார்தான் தங்களை அந்த கும்பலிடம் பிடித்துக் கொடுத்தனர் என்றும், நாங்கள் தாக்கப்பட்டபோது அங்கிருந்த காவலர்கள், அங்கு என்ன நடந்தது என்பது தங்களுக்குத் தெரியாது என்று எப்படிச் சொல்ல முடியும்? என்று பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.