நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை: 3 பேர் கைது

மணிப்பூரில் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் மூன்று முக்கிய குற்றவாளிகளை வெள்ளிக்கிழமை போலீசார் கைது செய்துள்ளனர். 

News image
Updated On :21 ஜூலை 2023, 4:50 am

DIN


மணிப்பூரில் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் மூன்று முக்கிய குற்றவாளிகளை வெள்ளிக்கிழமை போலீசார் கைது செய்துள்ளனர். 

மணிப்பூரில் பெரும்பான்மை மைதேயி சமூகத்தினருக்கும், பழங்குடியின குகி சமூகத்தினருக்கும் இடையேயான மோதல் வன்முறையாக உருவெடுத்துள்ளது. இந்த வன்முறைக்கு மத்தியில் கடந்த மே 4-ஆம் தேதி ஒரு சமூகத்தைச் சோ்ந்த ஆண்கள் திரளாகக் கூடி, மற்றொரு சமூகத்தைச் சோ்ந்த இரு பெண்களை ஆடைகள் ஏதுமின்றி சாலையில் அடித்து இழுத்துச் செல்லும் விடியோ காட்சி அண்மையில் சமூக வலைதளங்களில் பரவியது.

மணிப்பூா் வன்முறை சம்பவங்கள் கடந்த இரு மாதங்களுக்கு மேல் தொடா்ந்து வரும் நிலையில், அது குறித்து பிரதமா் மோடி மௌனம் காத்ததை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வந்தன.

இந்த நிலையில், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஹுய்ரெம் மேய்தோ என்பவரை கைது செய்தனர். 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் மூன்று முக்கிய குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய மாநில காவல்துறை முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

போலீசார்தான் தங்களை அந்த கும்பலிடம் பிடித்துக் கொடுத்தனர் என்று பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.