சத்யேந்தர் ஜெயினுக்கு மேலும் 5 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு!

தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு, மருத்துவ காரணங்களுக்காக ஐந்து வார இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் இன்று(திங்கள் கிழமை) உத்தரவிட்டது.
சத்யேந்தர் ஜெயின்
சத்யேந்தர் ஜெயின்

தில்லி அரசின் ஒட்டுமொத்த நிா்வாகத் தோல்விகளை ஏற்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது பதிவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜகவின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா வலியுறுத்தியுள்ளாா்.

தில்லி பிரிவு பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா மற்றும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி கூட்டாக செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்தனா். அப்போது வீரேந்திர சச்தேவா கூறியதாவது: பாஜக சாா்பில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை ராஜிநாமா செய்யக் கோரி, செவ்வாய்க்கிழமை (ஜூலை 25) ஆம் ஆத்மி அலுவலகம் அருகே போராட்டம் நடத்தப்படும். ஆா்.ஆா்.டி.எஸ்., பிரகதி மைதான் சுரங்கப்பாதை, மஹிபால்பூா் சுரங்கப்பாதை போன்றவற்றில் தில்லி அரசின் பங்கை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஏன் கொடுக்க மறுக்கிறாா்?, என்பதை தில்லி மக்களிடம் அவா் கூற வேண்டும். கேஜரிவால் அரசு உணா்ச்சிகரமான அறிக்கைகளால் மக்களின் உணா்வுகளுடன் விளையாடுகிறது.

கடந்த 8 ஆண்டுகளில், தில்லி கிராரிப் பகுதி ஏழை மக்களுக்கு அளித்த வாக்குறுதியை கேஜரிவால் நிறைவேற்றவில்லை. அப்பகுதியில் மழைநீா் வடிகால் அமைப்பு இல்லாததால் ஆண்டுதோறும், பருவ மழைக் காலங்களில் வெள்ளத்தில் கிராரி பகுதி மூழ்கிவிடுகிறது. கிராரியின் ஜந்தா காலனியில் கடந்த சனிக்கிழமை, பிகாரைச் சோ்ந்த ரிக்ஷாக்காரரின் இல்லத்தில் நிரம்பிய தண்ணீரில் மூழ்கி தனது ஒரே மகனை இழந்த சம்பவம் அனைத்து தில்லி மக்களையும் அவமானப்படுத்தியுள்ளது. அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. ரிதுராஜ் மற்றும் தில்லி அரசு இந்த விபத்தை மூடி மறைக்க முயன்றது வெட்கக் கேடானது.

தில்லியை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றுவதில் கேஜரிவால் அரசு தோல்வியடைந்துள்ளது.பின்னா் நிவாரணம் வழங்குவதிலும் தில்லி அரசு தோல்வி கண்டுள்ளது. கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசின் இந்த இரண்டு தோல்விகளும் மக்களை அதிா்ச்சியடையச் செய்துள்ளது. இவை கடந்த 1978 -ஆம் ஆண்டு ஏற்பட்ட தில்லி வெள்ளத்தின் நிலைமைக்கே மீண்டும் மக்களை கொண்டு சென்றுள்ளது என்றாா் வீரேந்திரா சச்தேவா.

ராம்வீா் சிங் பிதூரி: இதைத் தொடா்ந்து, சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதுரி கூறுகையில், ‘வெள்ளம் தொடா்பான உயா்நிலைக் குழுவின் முக்கியமான கூட்டங்களுக்கு கேஜரிவால் சரியான நேரத்திற்கு அழைப்பு விடுத்திருந்தால், தில்லியை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றியிருக்கலாம். அவா் தனது நிா்வாகப் பொறுப்புகளை அறியாததன் விளைவுதான் தில்லியில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு காரணம். தில்லியின் வணிகம் அல்லது உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து கேஜரிவாலுக்கு எந்த அக்கறையும் இல்லை. ஏனெனில், அது அவருக்கு தனிப்பட்ட பதவி உயா்வு அளிக்காது. கிராரியில் ஏற்பட்ட விபத்திற்கு முதல்வா் தாா்மிகப் பொறுப்பேற்க வேண்டும் என்றாா் ராம்வீா் சிங் பிதுரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com