ஹிண்டன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நீரில் மூழ்கிய வாகனங்கள்!

உத்தரப் பிரதேசத்தில் ஹிண்டன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 
ஹிண்டன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நீரில் மூழ்கிய வாகனங்கள்!

உத்தரப் பிரதேசத்தில் ஹிண்டன் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 

வட மாநிலங்களில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக இடைவிடாது மழை பெய்து வருகின்றது. இதனால், ம.பி., உ.பி, மகாராஷ்டிரம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பெய்துவரும் கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நொய்டா, காஜியாபாத் போன்ற தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் கனமழை காரணமாக அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

கடந்த 2 நாள்களுக்கு முன்னர் பெய்த கனமழையை அடுத்து ஹிண்டனை ஒட்டிய தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் நொய்டா ஈகோடெக்-3 பகுதியில் திடீரென வெள்ளநீர் அதிகரித்ததால் தாழ்வான பகுதியில் உள்ள வீடு மற்றும் சாலைகளில் வெள்ள நீர் புகுந்தது.  வெள்ள நீரில் சிக்கி பலர் மாயமாகியுள்ளனர். 

இதையடுத்து, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் வெள்ள நீர் மூழ்கடித்ததால் 350-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. இந்த விடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெள்ளத்தில் தத்தளிக்கும் அப்பகுதியில் என்.டி.ஆர்.எப் குழுவினர் நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com