குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தெலங்கானாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக தெலங்கானா மாநிலத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :27 ஜூலை 2023, 7:21 am

DIN

கனமழை காரணமாக தெலங்கானா மாநிலத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வட மாநிலங்களான மகாராஷ்டிரம், உ.பி., ம.பி., ஹிமாசல், உத்தரகண்ட், வடக்கு ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. 

இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக லட்சுமி தேவி பட்டையில் 65 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. 

மேலும் ஜெயசங்கர் மாவட்டம் சித்தியாலில் 62 செ.மீ. மழை பெய்துள்ளது. கன்பூர் மண்டலம் சேல்பூரில் 48 செ.மீ., ரெகோண்டாவில் 47 செ.மீ. மழை பொழிந்துள்ளது. 

எனவே, தெலங்கானா மாநிலத்தின் 20 இடங்களில் தலா 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.