தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அவலம்: மீட்டுத் தர கோரிக்கை

தெலங்கானா மாநிலத்திலிருந்து, உயர்படிப்பு படிக்க அமெரிக்கா சென்ற இளம் பெண்ணின் உடைமைகள் திருடப்பட்டதால், தெருவோரத்தில் கிடக்கும் அவல நிலை குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

News image
Updated On :27 ஜூலை 2023, 12:24 pm


தெலங்கானா மாநிலத்திலிருந்து, உயர்படிப்பு படிக்க அமெரிக்கா சென்ற இளம் பெண்ணின் உடைமைகள் திருடப்பட்டதால், தெருவோரத்தில் கிடக்கும் அவல நிலை குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்ததும், அப்பெண்ணின் தாயார், மத்திய வெளி விவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தனது மகளை மீட்டு பத்திரமாக இந்தியா அழைத்து வர உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில், எனது மகள் சயிதா லுலு மின்ஹஜ் ஸைடி, எம்எஸ் படிக்க அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேர்ந்தார். 

அவர் அங்குப் படித்துவந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக அவரிடமிருந்து எந்த அழைப்பும் தகவலும் வரவில்லை. இதனால் கவலையடைந்திருந்த நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இரண்டு பேர் தங்களுக்கு தொலைபேசி வாயிலாக அழைத்து, தங்களது மகள் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அவரது உடைமைகள் அனைத்தும் திருடுப்போனதால் அவர் சிகாகோவில்  தெருவோரத்தில் தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அவர்கள் தகவல் அளித்த பிறகே தங்களது மகள் குறித்த விவரம் தெரிய வந்திருப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து, அங்கிருக்கும் சமூக ஆர்வலர்கள் மூலம் அவர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டிவிட்டரில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் படித்துமுடித்து வேலை கிடைக்காததால், மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டதாகவும், அவ்வப்போது மனநிலை தடுமாற்றம் அடைவதாகவும், அவரை மீட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் மனநிலை சீரானால்தான் இந்தியாவுக்கு திரும்பி அனுப்பப்படுவார் என்றும், அவருக்கு உடனடியாக சிகிச்சை தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்டு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உதவ வேண்டும் என்றும் கோரிக்கைகளை எழுந்துள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.