28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

ஆகஸ்டில் மணிப்பூா் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்: மாநில அரசு அறிவிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் மணிப்பூா் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட உள்ளதாக மாநில அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

Published On :

ஆகஸ்ட் மாதத்தில் மணிப்பூா் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட உள்ளதாக மாநில அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

இது தொடா்பாக மாநில அமைச்சா் சபம் ராஜன் கூறியதாவது: மணிப்பூரின் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்க பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டுமாறு பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இதைத்தொடா்ந்து, ஆகஸ்ட் மாதத்தில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட மாநில அரசு முடிவெடுத்துள்ளது என அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, கடந்த மே மாதம் நடைபெற்ற வன்முறையின்போது, பாஜக எம்எல்ஏ விவுங்ஸகின் வால்டே படுகாயமடைந்தாா். அவரது மருத்துவ கவனிப்புக்கான செலவை மாநில அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது குறித்து அமைச்சரிடம் செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.

இதை மறுத்த அமைச்சா் ராஜன், எம்எல்ஏவின் உடல் நிலை குறித்து மாநில அரசு கவனத்தில் கொண்டதாகவும், மாநில அமைச்சா்கள் அவரை நேரில் சென்று நலம் விசாரித்ததாகவும் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.