பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அமித் ஷா, பிரியங்காவின் தெலங்கானா பயணம் ஒத்திவைப்பு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோரின் தெலங்கானா பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :28 ஜூலை 2023, 9:33 am

DIN

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோரின் தெலங்கானா பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தெலங்கானாவின் பாஜக செய்தித் தொடர்பாளர் என்.பி.சுபாஷ் வெளியிட்ட அறிக்கையில், 
தவிர்க்கமுடியாத காரணங்களால் ஜூலை 29-ம் தேதி ஷாவின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரித்தார். 

இதற்கிடையில், தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத் தலைவரும், முன்னாள் எம்பியுமான மல்லு ரவி கூறுகையில், 
கனமழை காரணமாக கொல்லப்பூரில் ஜூலை 30ல் பிரியங்கா காந்தி வத்ரா பங்கேற்கவிருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

பிரியங்கா முன்னிலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜூபல்லி கிருஷ்ணாராவ் முறையாக காங்கிரஸில் சேர இருந்தார். 

மேலும், இந்தக் கூட்டத்தில் தெலங்கானாவுக்கான கட்சியின் மகிளா பிரகடத்தை வத்ரா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 

மாநிலத்தில் ஜூலை 22 முதல் மழை தொடர்பான பல்வேறு சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் வியாழக்கிழமை தொடர்ந்து பெய்து கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.