புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அசாமில் வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்த மத்தியக் குழு!

அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிளின் புகைப்படங்களை அம்மாநில அரசு மத்திய அரசின் மதிப்பீட்டுக் குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :29 ஜூலை 2023, 10:55 am

DIN

அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிளின் புகைப்படங்களை அம்மாநில அரசு மத்திய அரசின் மதிப்பீட்டுக் குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் வீடுகள் மற்றும் விவசாயத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்களை மத்திய குழுவிடம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்தை பார்வையிட்ட 7  பேர் அடங்கிய மத்தியக் குழு இதனை தெரிவித்தது.

உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் சி.ஜி.ரஜினி காந்தன் தலைமையிலான இந்தக் குழு கடந்த மூன்று நாள்களாக இரண்டு குழுக்களாக பிரிந்து அசாமின் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டது. இந்தக் குழு லக்கிம்பூர், திமாஜி, பிஸ்வநாத், சிராங், நல்பாரி ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டது. இந்த ஆய்வின்போது வெள்ள பாதிப்புகள் குறித்தும், அதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அதிகாரிகள் குழுவிடம் மாநில அரசு சார்பில் மத்திய அரசு விரைந்து வெள்ள நிவாரணத் தொகையை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிவித்தனர். 

அசாமில் இதுவரை மழை வெள்ளத்தால் 9 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.