47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஓ.பி.ரவீந்திரநாத் மேல்முறையீட்டு மனுத் தாக்கல்

தேனி தொகுதி வெற்றி செல்லாது என்கிற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஓ.பி.ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :30 ஜூலை 2023, 5:20 am

DIN

தேனி தொகுதி வெற்றி செல்லாது என்கிற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஓ.பி.ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில், தேனி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மகன் ப.ரவீந்திரநாத் வெற்றி பெற்றாா். அவரது வேட்புமனுவில் சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதாகவும் தேனி தொகுதியில் அவா் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியும் தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  

இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா் அண்மையில் அளித்த தீா்ப்பில், இந்த வழக்கில் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் சமா்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில், தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது எனக் குறிப்பிட்டுள்ளாா்.  மேலும் ரவீந்திரநாத் தரப்பு கோரிக்கைக்கு ஏற்ப உயா்நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தீா்ப்பை 30 நாள்களுக்கு நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஓ.பி.ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ரவீந்திரநாத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.