மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஊழல் விவகாரத்தில் ராஜஸ்தானின் நற்பெயருக்கு பாஜக களங்கம் விளைவிக்கிறது: அசோக் கெலாட்

ஊழல் விவகாரத்தில் தேவையின்றி ராஜஸ்தான்  மாநிலத்தின் நற்பெயருக்கு பாஜக களங்கம் விளைவிப்பதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.

News image
Updated On :3 ஜூன் 2023, 1:47 pm

ஊழல் விவகாரத்தில் தேவையின்றி ராஜஸ்தான்  மாநிலத்தின் நற்பெயருக்கு பாஜக களங்கம் விளைவிப்பதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக தனது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ராஜஸ்தானின் சஞ்சோர் பகுதியில் ரூ.2,210 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் எடுத்த நடவடிக்கைகளுக்கு பாஜகவிடம் பதில்கள் கிடையாது. ஊழல் தொடர்பாக பொதுமக்களிடம் தேவையின்றி ராஜஸ்தானின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக பாஜக செயல்படுகிறது. எனது தலைமையிலான ஆட்சியில் மாநிலத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் யாரையும் எளிதில் விட்டுவிடவில்லை.  2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக ராஜஸ்தான் மாறும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.