தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்?
/

ஜபல்பூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: அதிர்ஷ்டவசமாக பெரும் சோகம் தவிர்ப்பு

மத்தியப்பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் அருகே எரிவாயு நிரப்பிய டேங்கர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

News image
Updated On :7 ஜூன் 2023, 10:21 am IST


போபால்: மத்தியப்பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் அருகே எரிவாயு நிரப்பிய டேங்கர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூர் அருகே எரிவாயு நிரப்பிய டேங்கர்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் செவ்வாய்க்கிழமை இரவு ஷாபுரா பிடோனி நிலையத்தில் உள்ள பாரத் பெட்ரோலியம் கிடங்கு அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.  

தகவல் அறிந்து சம்பவ இடைத்திற்கு விபத்து நிவாரண வாகனங்களுக்கு விரைந்து வந்த ரயில்வே மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டதில் எரிவாயு கசிவு ஏற்படாததால் அதிர்ஷ்டவசமாக எந்தவித அசம்பாவிதங்களும் நிகழவில்லை. ரயில் சேவையில் எந்த பாதிப்பும் இல்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.