பிபர்ஜாய் புயல் எதிரொலி: குஜராத்தில் 18-ம் தேதி வரை 99 ரயில்கள் சேவை ரத்து

பிபர்ஜாய் புயல் எதிரொலி: குஜராத்தில் 18-ம் தேதி வரை 99 ரயில்கள் சேவை ரத்து

பிபர்ஜாய் புயல் எதிரொலியால் குஜராத்தில் நாளை மறுநாள் வரை 99 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Published on

பிபர்ஜாய் புயல் எதிரொலியால் குஜராத்தில் நாளை மறுநாள் வரை (ஜூன் 18) 99 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்தாலும் அடுத்த ஐந்து நாள்கள் குஜராத் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வடக்கு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த அதிதீவிர பிபா்ஜாய் புயல் வியாழக்கிழமை மாலை மணிக்கு 6.30 மணியளவில் குஜராத்தின் கட்ச், செளராஷ்டிரா இடையே கரையைக் கடந்தது.

புயல் கரையைக் கடக்கும் போது 50 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசித் தொடங்கி படிப்படியாக அதிகரித்தது. பல்வேறு இடங்களில் கட்டடங்களில் மேற்கூரைகள் மற்றும் சாலைகள் பாதிக்கப்பட்டன.

பிபர்ஜாய் புயலுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர், 22 பேர் காயமடைந்துள்ளனர். 23க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகி உள்ளது, 442 கிராமங்களில் வசிக்கும் 19,12,337 பேர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தேசிய மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். 

ரயில்கள் சேவை ரத்து:  பிபர்ஜாய் புயல் எதிரொலியாக குஜராத்தில் நாளை மறுதினம் வரை 99 ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் கரையை கடந்தாலும் அடுத்த ஐந்து நாள்களுக்கு குஜராத் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com