குஜராத்தில் வியாழக்கிழமை மாலை கரையைக் கடந்த பிபர்ஜாய் புயலால் இருவர் பலியாகியுள்ளனர். மேலும், 23 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது.
ன் கடலோரப் பகுதியில் பலத்த காற்று, மழையுடன் ஜாக்கவ் துறைமுகம் அருகே வியாழக்கிழமை மாலை பிபா்ஜாய் புயல் கரையைக் கடந்தது.
கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வடக்கு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த அதிதீவிர பிபா்ஜாய் புயல் வியாழக்கிழமை மாலை மணிக்கு 6.30 மணியளவில் குஜராத்தின் கட்ச், செளராஷ்டிரா இடையே கரையைக் கடக்கத் தொடங்கியது.
புயல் கரையைக் கடக்கும் போது 150 கி.மீ. வரை பலத்த காற்று வீசிய நிலையில், பல்வேறு இடங்களில் கட்டடங்களில் மேற்கூரைகள் மற்றும் சாலைகள் பாதிக்கப்பட்டன.
இதையும் படிக்க | மாநிலங்களுக்கு அரிசி விற்பனை இல்லை!
இந்நிலையில், புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தேசிய பேரிடர் மீட்புப் படை முதல்கட்ட அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், புயலால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் 1,08,208 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்ததாகவும், 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், 442 கிராமங்களில் வசிக்கும் 19,12,337 பேர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.