ஹைதராபாத்தில் பர்னிச்சர், துணிக்கடை கிடங்கில் பயங்கர தீ விபத்து!

ஹைதராபாத் அருகே வனஸ்தலிபுரத்தில் உள்ள பர்னிச்சர் மற்றும் துணிக்கடை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஹைதராபாத்தில் பர்னிச்சர், துணிக்கடை கிடங்கில் பயங்கர தீ விபத்து!
Updated on
1 min read

ஹைதராபாத்: ஹைதராபாத் அருகே வனஸ்தலிபுரத்தில் உள்ள பர்னிச்சர் மற்றும் துணிக்கடை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் வனஸ்தலிபுரம் ரச்சகொண்டா ஹஸ்தினாபுரம் சாலையில் அமைந்துள்ள பர்னிச்சர் மற்றும் துணிக்கடை கிடங்கில் சனிக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலை அடுத்து 5 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.  

இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள துணிகள், பர்னிச்சர் பொருள்கள் எரிந்து நாசமானது. 

தீ விபத்துக்கான காரணங்கள் தெரியவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com