

புதுதில்லி: விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியா விமானங்களில் தில்லி-சென்னை வணிக வகுப்பு விமான டிக்கெட்டுகள் அதிகப்படியான விமானக் கட்டணங்கள் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டர் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:
விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியா விமானங்களில் தில்லி-சென்னைக்கான வணிக வகுப்பு விமான டிக்கெட்டுகள் முறையே ரூ.6300 மற்றும் ரூ.5700 'நியாயமான' விலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அச்சச்சோ, மன்னிக்கவும், அவை முறையே 'மிக நியாயமான' விலையில் ரூ.63,000 மற்றும் ரூ.57,000 என அமைக்கப்பட்டுள்ளன.
தடையற்ற சந்தைகளில், தேவைகள் அதிகரிக்கும் போது, வழங்களும் அதிகரிக்கும்,
இந்தியாவின் சுதந்திர சந்தையில், தேவைகள் அதிகரிக்கும் போது, விலைகளும் அதிகரிக்கும்.
விமான நிறுவனங்கள் தங்கள் வழித்தடங்களை விரிவுபடுத்தும், பழைய வழித்தடங்களில் விமானங்களை குறைத்து, விலைகளை உயர்த்தும்.
இது, ஏகபோக முதலாளித்துவத்தில் இந்தியா உலகிற்கு விஸ்வகுருவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரத்தின் கருத்துக்கு நெட்டிசன்கள் பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
நீங்கள் சாதாரண வகுப்புகளில் பயணிக்கலாமே என பலர் பதில் அளித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.