நாட்டில் நிலவும் வெப்ப அலை குறித்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் உயர்நிலைக்குழு கூட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வெப்ப அலை சூழலைச் சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
நீதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரல் டாக்டர் ராஜிவ் பால், வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா,
அதிக வெப்பம் நிலவும், வெப்ப அலை சம்பவங்கள் ஏற்படும் மாநிலங்களில், பேரிடர் மேலாண்மை, வானிலை மையம் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று மாநில அரசுக்கு உதவ அனுப்பப்படும்.
ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், தெலங்கானா, ஜார்க்கண்ட், பிகார் போன்ற கிழக்கு மாநிலங்களில் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை செய்யவிருக்கிறேன். மேலும் வெப்ப அலை காரணமாக ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க ஐசிஎம்ஆருக்கு முன்கூட்டியே தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

குளத்தூா் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி கொலை: குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம்

தஞ்சாவூரில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பெட்ரோல் பங்குகளில் குவிந்த வாகன ஓட்டிகள்!
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

