தில்லி ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் முர்மு வழிபாடு!

தில்லி ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் முர்மு வழிபாடு!

தில்லியில் உள்ள ஹவுஸ் காஸில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழிபாடு செய்தார். 

தில்லியில் உள்ள ஹவுஸ் காஸில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழிபாடு செய்தார். 

ஒடிசா மாநிலத் தலைநகரின் புவனேஸ்வரிலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் புரி ஜெகந்நாதர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் ஜெகந்நாதருக்கு கோலாகலமாக யாத்திரை நிகழ்த்தப்படுகிறது. 

அதன்படி, இந்தாண்டுக்கான ரத யாத்திரை இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது. பல்வேறு ஆச்சரியங்கள் அடங்கிய இக்கோயிலில் ரத யாத்திரை மிகவும் புகழ்பெற்றது. ஒன்பது நாள்கள் நடைபெறும் தேர்த் திருவிழாவை குண்டிச யாத்ரா என்று அழைக்கப்படுகிறது. 

ஒடிசாவின் ஜெகந்நாதர் ஆலயத்தில் இன்று அதிகாலை தொடங்கிய ரத யாத்திரையில் தேரை வடம் பிடித்து இழுக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலின் முன் திரண்டிருந்தனர். 

விழா நடைபெறும் இடத்தில் பாதுகாப்புப் பணிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஒடிசா முழுவதும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. 

இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு தில்லியில் உள்ள ஜெகந்நாதர் ஆலயத்தில் இன்று காலை வழிபாடு செய்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com