பிகாரில் எதிர்க்கட்சிகள் கூட்டம்: புறக்கணிக்க மாயாவதி முடிவு!

பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி புறகணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
மாயாவதி
மாயாவதி

பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி புறகணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகளைத் திரட்ட திட்டம் செய்து வருகிறது. இந்நிலையில் பிகார் முதல் நிதிஷ்குமார் ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து வந்தார். இந்நிலையில் நாளை பிகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக உ.பி.முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி அறிவித்துள்ளார். 

நாளை நடைபெறும் கூட்டத்தில் தமிழக முதல்வர், மேற்குவங்க முதல்வர் மம்தா, தில்லி முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com