பிரதமர் நரேந்திர மோடியை வருகிற 2024 மக்களவைத் தேர்தலில் தனியாக எதிர்த்து நின்று தோற்கடிக்கும் திறன் இல்லாததால் காங்கிரஸ் மற்ற கட்சிகளின் ஆதரவை நாடுவதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதில் பாஜகவை எதிா்கொள்ள, எதிா்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளை பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா் முன்னெடுத்து வருகிறாா்.
அதன் ஒரு பகுதியாக, பிகார் மாநிலம் பாட்னாவில் அவா் ஏற்பாடு செய்துள்ள எதிா்க்கட்சிகள் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் டி.ராஜா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனா்.
இந்த நிலையில், பிரதமர் மோடியை வருகிற 2024 மக்களவைத் தேர்தலில் தனியாக எதிர்த்து நின்று தோற்கடிக்கும் திறன் இல்லாததால் காங்கிரஸ் மற்ற கட்சிகளின் ஆதரவை நாடுவதாக பாஜக தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பாஜக தலைவர் மற்றும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி கூறியதாவது: இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டபோது ஜனநாயகப் படுகொலையை காண நேர்ந்த சில தலைவர்கள் தற்போது காங்கிரஸுடன் இணைந்து பாட்னாவில் கூடியுள்ளனர். இந்த கூட்டத்தின் மூலம் காங்கிரஸ் ஒன்றை தெளிவுப்படுத்துகிறது. அவர்களால் வருகிற 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை தேர்தல் களத்தில் தனித்து சந்திக்க முடியாது என தெளிவுபடுத்துகிறது. காங்கிரஸால் பிரதமர் மோடியை தனித்து நின்று தோற்கடிக்க முடியாது என வெளிப்படையாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி கூற விரும்புகிறேன். அவர்களுக்கு ஆதரவு தேவைப்படுகிறது. அதன் காரணத்தினால் அவர்கள் அவசரநிலையின்போது சிறையில் வைக்கப்பட்டவர்களின் ஆதரவை நாடுகின்றனர். பிகாரின் கங்கை நதியின் மீது சரியாக பாலம் கட்ட முடியாத அம்மாநில முதல்வர் எப்படி ஜனநாயக பாலத்தினை அமைக்கப் போகிறார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

பேரவையில் கட்சித் தலைவர்களின் துதிபாடல்தான் நடக்கிறது! பிரேமலதா

ஸ்லோவாக்கியா நாடாளுமன்றத் தலைவருக்கு இந்தியாவின் பாரம்பரிய உணவைப் பரிசளித்த பிரதமர் மோடி!

இத்தாலி வரைக்கும் சென்ற லக்ஷ்மி அம்மாள், நரோடா ஆடியோ..! வைரலாகும் ஜுவென்டஸ் அணியின் ரீல்ஸ்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



