தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

இத்தாலி வரைக்கும் சென்ற லக்‌ஷ்மி அம்மாள், நரோடா ஆடியோ..! வைரலாகும் ஜுவென்டஸ் அணியின் ரீல்ஸ்!

கால்பந்து வீரர்களின் பெயரை தவறாக உச்சரித்து வைரலான பெண்ணின் ஆடியோவை பயன்படுத்தி ரீல்ஸ் பதிவிட்ட ஜுவென்டஸ் அணி குறித்து...

News image

ஜுவென்டஸ் அணியும் வைரலான பெண்மணியும். - படங்கள்: இன்ஸ்டா / ஜுவென்டஸ், 350 ஷர்ட்ஸ்.

Updated On :19 ஜூன் 2026, 3:32 pm IST

கால்பந்து வீரர்களின் பெயரை தவறாக உச்சரித்து வைரலான தமிழ் ஆடியோவை பயன்படுத்தி ஜுவென்டஸ் அணி ரீல்ஸ் பதிவிட்ட விடியோ வைரல் ஆகியுள்ளது.

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் கடந்த ஜூன் 11 முதல் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. முதல்முறையாக 48 அணிகள் பங்குபெறும் இந்தப் போட்டி ஜூலை 19 வரை நடைபெற இருக்கிறது.

தமிழகத்தில் கிரிக்கெட் அளவுக்கு கால்பந்து புகழ்பெறாவிட்டாலும் அதற்கென தனியான ரசிகர்கள் இருக்கிறார்கள். கேரளத்திலும் பாண்டிச்சேரியில் இதற்கு ரசிகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.

பாண்டிச்சேரியைச் சேர்ந்த செல்வி (செல்வி அம்மா) என்ற கணவனைப் பிரிந்த பெண் ஒருவர் கால்பந்து வீரர்களுக்கான ஜெர்ஸியை விற்று வருகிறார். அவருக்கு அது கால்பந்து என்பதும் தெரியவில்லை, அதில் வரும் நட்சத்திர வீரர்களின் பெயரும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்ஜென்டீனாவின் மெஸ்ஸியை அர்ஜென்டுனா லெஸ்ஸி, ஸ்பெயின் நட்சத்திர வீரர் லாமின் யமாலை லஷ்மி அம்மாள், போர்ச்சுகல் நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோவை நரோடா எனவும் பெக்கமை பிகாம் எனக் கூறியதும் வைரலானது.

குறிப்பாக லாமின் யமாலை லஷ்மி அம்மாள் என்றதுதான் உலகப்புகழ்ப்பெற்றது. இந்த ரீல்ஸ் பல லட்சங்களைத் தாண்டியது.

இத்தாலியின் மிகவும் புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான ஜுவென்டஸ் அணி தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்த வைரலான பாட்டியின் ஆடியோவைப் பயன்படுத்தி ரீல்ஸ் வெளியிட்டுள்ளது. இது தமிழர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக, வாரணாசி படத்தின் பாடலை வெளியிட்டிருந்தது. ரொனால்டோ இந்த அணியில் விளையாடியிருக்கிறார். சௌதி அரேபியாவில் அல்-நாசர் எனும் கிளப்பில் விளையாடுகிறார்.

கால்பந்து உலகக் கோப்பையின் முதல் போட்டியில் ரொனால்டோவின் ஆட்டம் மோசமாக இருந்தது பலரையும் விமர்சிக்க வைத்தது.

Summary

lakshmi ammal aka lamine yamal viral audio used by Football club Juventus, viral video on instagram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.