புலம்பெயர்ந்த வீரர்களை கால்பந்து உலகக் கோப்பைக்கான அணியில் இணைத்துள்ள ஆஸ்திரேலிய அணி, “கால்பந்து அனைவருக்குமானது” என்ற கருத்தை உரக்க சொல்லியிருப்பது உலக அளவில் கவனம் பெற்று வருகிறது.
கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெற இருக்கின்றன. ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் துருக்கியை நாளை எதிர்கொள்கிறது. 48 அணிகள் மொத்தமாக 104 போட்டிகளில் விளையாடுகின்றன.
ஆஸ்திரேலிய கால்பந்து அணி சாக்கரூஸ் (Socceroos) என அழைக்கப்படுகிறது. இந்த ஆஸ்திரேலிய அணியில் புலம்பெயர்ந்தோர்கள் பலர் விளையாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய காலங்களில் ஆஸ்திரேலியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்தோர்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. அவர்களுக்கான உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகின்றன.
அவேர் மாபில்: தெற்கு சூடானிய பெற்றோர்களுக்கு கென்யாவின் அகதிகள் முகாமில் பிறந்தவர். தற்போது, ஆஸ்திரேலிய அணியில் விளையாடி வருகிறார்.
முகமது டோர்: லிபேரியன் பெற்றோர்களுக்கு கியூனியா அகதிகள் முகாமில் பிறந்த இவர் தற்போது அடிலெய்டில் வசிக்கிறார். ஆஸி. அணியிலும் விளையாடுகிறார்.
நெஸ்டோரி இரங்குண்டா: தான்சானியாவின் அகதிகள் முகாமில் பிறந்த இவர் ஆஸி. அணியில் விளையாடி வருகிறார்.
மிலோஸ் டீஜெனிக்: குரோஷியாவுக்கு கைக்குழந்தையாகச் சென்ற இவர் செர்பியாவில் அகதியாக வளர்ந்தார். தனது 6 வயதில் சிட்னிக்கு குடிபெயர்ந்தார். தற்போது ஆஸி. அணியில் விளையாடுகிறார்.
பிஃபா உலகக்கோப்பை வரலாற்றில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நிஷான் வேலுப்பிள்ளை ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மாபில், “இந்தச் சீறுடையை அணிவதில் கடினமான பல பயணங்கள் இருக்கின்றன. சாக்கரூஸாக இருப்பதில் பல அர்த்தங்கள் இருக்கின்றன. ஆனால், ஒரே நோக்கம்தான். நாட்டைப் பெருமைப்படுத்துவது” என்றார்.
ஆஸ்திரேலியாவின் கால்பந்து அமைப்பின் தலைமை அதிகாரி போ புஷ், “கால்பந்து அனைவருக்குமானது. ஒரு நேரத்தில் எங்களைப் பிரித்து நாங்கள் யாருக்குச் சொந்தமானவர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. உண்மையில் நாங்கள் யார் என்பதை சாக்கரூஸ் எங்களுக்கு பக்கபலமாக நின்று நிரூபித்தது.
உலகின் பல மூலைகளில் இருந்து வந்தவர்கள் கால்பந்தையும், எங்கள் சமூகத்தையும், நுண்ணுர்வுகளையும் முன்னேற்றியுள்ளார்கள்” என்றார்.
கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய அணி கால்பந்து உலகக் கோப்பையில் ஐந்து முறை விளையாடியிருக்கிறது. இரண்டு முறை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன.
குரூப் டி பிரிவில் ஆஸ்திரேலியா துருக்கி, அமெரிக்கா, பராகுவே அணிகள் இடம்பிடித்துள்ளன.
If you need another reminder ðï¸ð
— CommBank Socceroos (@Socceroos) June 10, 2026
ð±ð»ðº Live on SBS & SBS On Demand#Socceroos #FIFAWorldCup pic.twitter.com/c691CKuplu
Summary
Australia embraces immigrants on World Cup squad with message that soccer is for everyone
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்ட மைதானம்!
ஃபிஃபா உலகக் கோப்பை ! மூடநம்பிக்கையால் வீட்டிலிருந்தே இறுதி ஆட்டத்தைப் பார்க்கும் ஆர்ஜென்டீனா அதிபர்!
ஃபிஃபா உலகக் கோப்பை: விற்பனைக்கு வரும் திடலின் புற்கள்! என்ன விலை தெரியுமா?

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா!
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



