புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் தொடங்கியது!

பிகார் மாநிலம் பாட்னாவில் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

News image
Updated On :23 ஜூன் 2023, 6:50 am

DIN

பிகார் மாநிலம் பாட்னாவில் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மக்களவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதில் பாஜகவை எதிா்கொள்ள, எதிா்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளை பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா் முன்னெடுத்து வருகிறாா்.

Story image

அதன் ஒரு பகுதியாக, பிகார் மாநிலம் பாட்னாவில் அவா் ஏற்பாடு செய்துள்ள எதிா்க்கட்சிகள் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் 12 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிர முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் டி.ராஜா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனா். 

இதில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.