பாட்னாவில் நடைபெற்று வரும் எதிர்க்கட்சிகள் கூட்டம், புகைப்படம் எடுக்கும் நிகழ்வு என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிா்கொள்ள, எதிா்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா் முன்னெடுப்பில் எதிா்க்கட்சிகள் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகிறது.
இதில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் என நாடு முழுவதும் உள்ள 15க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'பாட்னாவில் ஒரு புகைப்படம் எடுக்கும் நிகழ்வுதான் நடந்து கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியையும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகள் சவால் விட நினைக்கின்றனர்.
ஆனால், வரும் மக்களவைத் தேர்தலில் மோடியே மீண்டும் பிரதமர் வேட்பாளர். 300 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும்' என்றார்.
இதையும் படிக்க | பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் தொடங்கியது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்
சூர்யாவுக்காக பாடிய சிலம்பரசன்!

ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் விளையாடுவாரா?

பர்க்மேன் ஸ்ட்ரீட் இஎக்ஸ்: சுசூகியின் புதிய வெளியீடு!
வீடியோக்கள்

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

