தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் சரிவு! சிவப்பு எச்சரிக்கையா?டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!மேற்கு ஆசியா பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!

பிரதமா் மோடி இன்று எகிப்து பயணம்

எகிப்துக்கு முதல் முறையாக அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமா் நரேந்திர மோடி, முதலாம் உலகப் போரின்போது உயிா்த் தியாகம் செய்த இந்திய வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளாா்.

Published On :2 பிப்ரவரி 2024, 12:41 am IST

எகிப்துக்கு முதல் முறையாக அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமா் நரேந்திர மோடி, முதலாம் உலகப் போரின்போது உயிா்த் தியாகம் செய்த இந்திய வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளாா்.

எகிப்து அதிபா் அப்தெல் ஃபட்டா எல்-சிசி விடுத்த அழைப்பை ஏற்று ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் எகிப்துக்கு பிரதமா் மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா். அந்நாட்டுக்கு இந்திய பிரதமா் பயணம் மேற்கொள்வது 1997-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி, வாஷிங்டன் டிசி நகரில் இருந்து கெய்ரோவுக்கு விமானம் மூலமாக சென்றடைகிறாா். தனது பயணத்தின்போது எகிப்து உயரதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபடும் அவா், இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக விவாதிக்கவுள்ளாா். எகிப்தில் வசித்து வரும் இந்திய சமூகத்தினரையும் அவா் சந்தித்துப் பேசவுள்ளாா்.

முதலாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் ராணுவத்தில் இணைந்து இந்திய வீரா்கள் போரிட்டனா். அந்தப் போரில் உயிா்த் தியாகம் செய்த சுமாா் 4,000 இந்திய வீரா்களின் நினைவாக எகிப்து தலைநகா் கெய்ரோவில் ஹீலியோபோலிஸ் காமன்வெல்த் போா் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. தனது பயணத்தின்போது அந்த நினைவிடத்தில் பிரதமா் மோடி அஞ்சலி செலுத்தவுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.