வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பிரதமரின் அமெரிக்கப் பயணம் இரு நாட்டு உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்: ஹர்தீப் சிங்

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :24 ஜூன் 2023, 2:38 pm

DIN

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாஜக தலைமையகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்குமான இருதரப்பு உறவை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். பிரதமரின் இரண்டு நாள் எகிப்து பயணமும் மிகவும் முக்கியமானதான இருக்கப் போகிறது.

அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட உற்சாக  வரவேற்பு சிறப்பானதாக அமைந்தது. பிரதமரின் இந்த பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. தற்போது பிரதமரின் எகிப்து பயணமும் பல நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தப் போகிறது. இந்தியாவிற்கு மட்டுமின்றி ஆப்பிரிக்காவில் உள்ள மற்ற நாடுகளுக்கும் இந்த பயணம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வளைகுடா நாடுகளுடன் இந்தியா வலுவான நட்புறவைக் கொண்டுள்ளது. பிரதமர் முதல் முறையாக எகிப்துக்கு செல்கிறார். இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப் போகிறது.  அமெரிக்காவில் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதும், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் பேசிய பிறகு அவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கை குலுக்கவும், ஆட்டோகிராஃப் பெற சூழ்ந்து கொண்டதுமே அவர் உலகத் தலைவர் என்பதற்கான சான்று. என்னால் இதனை நம்பிக்கையுடன் சொல்ல முடியும். வெளியுறவுக் கொள்கை தொடர்பான என்னுடைய 39 ஆண்டுகால தனிப்பட்ட அனுபவத்தில் இது போன்ற ஒரு நிகழ்வை ஒரு போதும் பார்த்ததில்லை  என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.