மெல்ல இயல்புநிலைக்கு திரும்பும் அசாம்: கனமழைக்கு 2.72 லட்சம் பேர் பாதிப்பு!

அசாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 2.72 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நிலைமை படிப்படியாக மேம்பட்டு வருகின்றன. 
மெல்ல இயல்புநிலைக்கு திரும்பும் அசாம்: கனமழைக்கு 2.72 லட்சம் பேர் பாதிப்பு!

அசாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 2.72 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நிலைமை படிப்படியாக மேம்பட்டு வருகின்றன. 

அசாம் மாநில பேரழிவு மேலாண்மை ஆணையத்தின்படி, 

பஜாலி, பக்ஸா, பார்பேட்டா, டர்ராங், துப்ரி, திப்ருகர், கோல்பாரா, கோலகத், ஜோர்ஹாட், கம்ரூப், லகிம்பூர், நாகோன், நால்பரி மற்றும் தமுல்பூர் ஆகிய மாவட்டத்தில் உள்ள 37 வருவாய் வட்டங்களின் கீழ் சுமார் 874 கிராமங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. 

அதேசமயம், பார்பேடா மாவட்டத்தில் 1.70 லட்சம் பேரும், பஜாலியில் 60,707 பேரும், லக்கிம்பூரில் 22,060 பேரும், நால்பரி மாவட்டத்தில் 10,351 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வெள்ளத்தால் 5936.63 ஹெக்டேர் பயிர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் 61 நிவாரண முகாம்கள் மற்றும் 104 நிவாரண விநியோக மையங்களும் அமைத்துள்ளது. மேலும் 43,064 பேர் இன்னும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் நால்பரி மாவட்டத்தில் 222 விலங்குகள் அடித்துச் செல்லப்பட்டன. நால்பரி மற்றும் தமுல்பூர் மாவட்டங்களில் 1,290 வீடுகள் சேதமடைந்துள்ளது. 

என்டிஆர்எஃப், எஸ்டிஆர்எஃப், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com