மணிப்பூர் வன்முறை: பிரதமர் மோடி ஆலோசனை
மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.


தில்லி: மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
மணிப்பூரில் மைதேயி மற்றும் சிறுபான்மை பழங்குடி சமூகத்தினரிடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது முதல் தொடர்ந்து வன்முறை நிலவி வருகிறது. இதுவரை 120-க்கும் மேற்பட்டோர் வன்முறைக்கு பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
மக்கள் வீடு மட்டுமின்றி மத்திய, மாநில அமைச்சர்களின் வீடுகளும் தீக்கரையாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சிகள் அனைத்துக் கட்சி குழுவை மணிப்பூருக்கு அனுப்ப கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், அமெரிக்க - எகிப்து பயணத்தை முடித்துவிட்டு தில்லி திரும்பியுள்ள பிரதமர் மோடி, மணிப்பூர் நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...