
நாட்டின் 80% பகுதிகளில் பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சுமார் 62 ஆண்டுகளுக்குப் பின் மும்பை, தில்லியில் ஒரே நேரத்தில் பருவமழை தொடங்கியுள்ளது. ஜூன் 21, 1961க்குப் பிறகு முதன்முறையாக தில்லி மற்றும் மும்பை ஆகிய இரு நகரங்களிலும் ஞாயிற்றுக்கிழமை பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் ஹரியாணா, சண்டிகர் மற்றும் தில்லியில் பருவமழையானது இன்னும் தீவிரமடைய வாய்புள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மேற்கு கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: சென்னை மெட்ரோ: ஒரே நாளில் 2.81 லட்சம் பேர் பயணம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.