நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திரிணமூல் காங்கிரஸுக்கு பொய் கூறும் பழக்கம்: பாஜக விமர்சனம்!

திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கு பொய்யுரைக்கும் பழக்கம் உள்ளதாக மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி விமர்சித்துள்ளார். 

News image

சுவேந்து அதிகாரி

Updated On :26 ஜூன் 2023, 1:59 pm

DIN

திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கு பொய்யுரைக்கும் பழக்கம் உள்ளதாக மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி விமர்சித்துள்ளார். 

மேற்கு வங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, திரிபுரா, உத்தரப் பிரதேசத்திலும் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். கோவாவில் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றிடத்தைப் பெற்றனர். மேற்குவங்கத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொழில் துறையில் முன்னேற்றம் இல்லை. தொழில் முதலீடுக்கான இணக்கமான சூழலும் இல்லை. புதிய விமான நிலையங்கள், புதிய வேலைவாய்ப்பு என எதுவும் இல்லை. 

ஆனாலும் தன்னுடைய சொந்த நிகழ்ச்சிகளுக்காக 500 கோடி வரை மம்தா செலவிடுகிறார். பணிநியமன முறைகேட்டில் சிக்கிய குற்றவாளியைக் காக்க நீதிமன்றத்தில் 300 கோடி செலவிடுகிறார் என குற்றம் சாட்டினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.