குப்பையில் கிடந்த பெண் சடலம்: தில்லியில் பரபரப்பு!
வடக்கு தில்லியின் சப்ஸி மண்டி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அருகே உள்ள குப்பையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.


வடக்கு தில்லியின் சப்ஸி மண்டி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அருகே உள்ள குப்பையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
பரிசோதனையின் போது பெண்ணில் உடலில் வெளிப்புற காயங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இறந்த பெண்ணின் வயது 40 என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அந்த பெண்மணி போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று சந்தேகிக்கப்படுவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இறந்த பெண்ணின் அருகே சந்தேகப்படும் படியான எந்த உடமைகளும் காணப்படவில்லை. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், அந்த பகுதியைச் சுற்றி சிசிடிவி கேமராக்களின் மூலம் கண்டறிய போலீஸார் முயன்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...