ரூ.295 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல்!

சர்வதேச போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு ரூ.295 கோடி மதிப்புள்ள சுமார் 8,950 கிலோ எடையுள்ள பல்வேறு போதை மருந்துகள் அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.295 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல்!

ஹைதராபாத்: சர்வதேச போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு ஹைதராபாத் அருகே ரூ.295 கோடி மதிப்புள்ள சுமார் 8,950 கிலோ எடையுள்ள பல்வேறு போதை மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருள்களை ஹைதராபாத் சுங்கத்துறை அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசால் தொடங்கப்பட்ட 'நாஷா முக்த் பாரத்' (போதைப்பொருள் இல்லாத இந்தியா) மற்றும் 'போதைப் பொருள் வேண்டாம்' பிரசாரங்களின் ஒரு பகுதியாக, ஹைதராபாத் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மற்றும் ஹைதராபாத் சுங்கத் துறையால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டது.

அழிக்கப்பட்ட போதைப் பொருள்களில் 2655.942 கிலோ கஞ்சா, 11 கிலோ ஹெராயின், 409.39 கிலோ அல்பிரஸோலம், 142.932 கிலோ எபிட்ரின் ஹைட்ரோகுளோரைடு, 74.92 கிலோ கெட்டமைன் ஹைட்ரோகுளோரைடு, 2.956 கிலோ மெஃபெட்ரோன், 53.983 கிலோ மெஃபெட்ரோன் மற்றும் 53.983 கிலோ மெத்தகுலோன் ஆகும்.

சுமார் ரூ.77 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 கிலோ ஹெராயின் 2022 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இங்குள்ள சர்வதேச விமான நிலையமான மலாவி, தான்சானியா மற்றும் அங்கோலா பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

மேட்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்தின் துண்டிகுல் கிராமத்தில் அமைந்துள்ள ஹைதராபாத் கழிவு மேலாண்மை திட்டத்தில் ரூ.295 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் எரிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com