
சந்திராயன் -3 ராக்கெட் ஜூலை 13ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு விண்ணில் பாயும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார்.
நிலவு குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திராயன் விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஏற்கெனவே இரண்டு கலன்கள் நிலவில் ஆய்வு மேற்கொண்டன. அதனைத் தொடர்ந்து சந்திராயன் -3 விண்கலம் உருவாக்கும் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டது.
நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன் 3 விண்கலம் ஏற்கெனவே ஸ்ரீஹரிகோடாவில் உள்ள சதீஸ் தவான் ஏவுத்தளத்துக்கு சென்றடைந்தது. சந்திராயனை ஏவுவதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. திட்டமிட்டபடி இறுதிகட்ட சோதனைகள் வெற்றிபெறும் பட்சத்தில் ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சந்திராயன் -3 விண்கலம் ஜூலை 13ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு விண்ணில் பாயும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.