ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் நாளை அமித் ஷா உரை!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டுக்கால சாதனையை விளக்க பொதுக்கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை ராஜஸ்தானில் நடைபெற உள்ளது.

News image
Updated On :29 ஜூன் 2023, 11:48 am

DIN

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டுக்கால சாதனையை விளக்க பொதுக்கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை ராஜஸ்தானில் நடைபெற உள்ளது. இப்பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்ற உள்ளார்

ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள காந்தி மைதானத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் மோடி அரசாங்கத்தின் கடந்த ஒன்பது ஆண்டுக்கால சாதனைகளை ஷா முன்னிலைப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து இரண்டாவது முறை பொறுபேற்று கடத்த மே மாதம் 30-ம் தேதியுடன்  ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்த சாதனைகளை நாடு முழுவதும் உள்ள மக்களை கொண்டு போய் சேர்க்கும்  வண்ணம் பாரதீய ஜனதா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக உள்துறை அமைச்சரின் பொதுப் பேரணியும் ஒன்று. கடத்த ஒன்பது ஆண்டுகளில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் நாடு முழுவதும் உள்ள மக்களின் நலனுக்காக மோடி அரசின் சாதனைகளை எடுத்துரைத்து வருகின்றனர்.

அவற்றில் முக்கியமாக  பிரதான்மந்திரி உஜ்வாலா யோஜனா, திட்டத்தின் கீழ் இலவச காஸ் இணைப்பு, உயர்கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியுடன் முழுமையான வளர்ச்சி, பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் சாலை உள்கட்டமைப்புக்கள், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், அனைவருக்கும் தரமான மருந்துகளை மலிவு விலையில் வழங்குதல், இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றியமைத்து டிஜிட்டல் புரட்சி ஆகியவை அடங்கும். 

பெரும் சர்ச்சைகளில் சிக்கிய ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, பிரதமர் அவர்களின் மற்றொரு சாதனையாக  பாரதீய ஜனதா கூறுகிறது. தேர்தல் அறிக்கையில் சொல்லியது போல் ஜம்மு கஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதை நிச்சயம் தனது உரையில் அமித்ஷா சேர்த்துக்கொள்வர் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனாவை கையாண்டது மோடி அரசாங்கத்தின் முக்கிய சாதனைகளில் ஒன்றாகும், இதை ஷா தனது உரையிலும் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.