ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

மணிப்பூரில் காங்கிரஸ் போராட்டம்! ஹெலிகாப்டரில் செல்கிறார் ராகுல் காந்தி!!

மணிப்பூரில் ராகுல் காந்தியின் வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மணிப்பூரில் ராகுல் காந்தியின் வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் போராட்டம்

Published On :

மணிப்பூரில் ராகுல் காந்தியின் வாகனத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த மாதம் தொடக்கம் முதல் வன்முறை நீடித்து வருகிறது. 100-க்கும் மேற்பட்டோா் இந்த வன்முறையில் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். 

Story image

மணிப்பூரில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்த பாஜக அரசும் பிரதமர் மோடியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. 

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ளார். தில்லியில் இருந்து இம்பால் விமான நிலையம் வந்தடைந்த அவர், பிஷ்ணுபூர் பகுதிக்குச் சென்றார். ஆனால், காவல்துறையினர் ராகுல் காந்தியின் வாகனத்தைத் தடுத்தி நிறுத்தினர். வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு கருதி திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது. 

Story image

இதனால், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் ராகுல் காந்தியை பார்க்க காத்துக்கொண்டிருந்த உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து வருகின்றனர். 

ராகுல் காந்தி மீண்டும் இம்பால் விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் பல்வேறு நிவாரண முகாம்களுக்குச் செல்லவிருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.