பாரத்பூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் ஜெ.பி.நட்டா!
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ராஜஸ்தானிலுள்ள பாரத்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்று உரையாற்றுகிறார்.


பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ராஜஸ்தானிலுள்ள பாரத்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்று உரையாற்றுகிறார்.
இதுகுறித்து ராஜஸ்தான் பாஜக தலைவர் கூறியதாவது,
பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி நட்டா இன்று பாரத்பூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மேலும் கட்சியின் புதிய அலுவலக கட்டடத்தை அவர் திறந்து வைக்கிறார். பின்னர், நாட்பாய் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன் 30 காலை 11 மணிக்கு ராஜஸ்தானின் உதய்பூர் தபோக் விமான நிலையத்தை அடைந்து, சவாய் ஸ்தல் காந்தி மைதானத்தில் நடக்கவிருக்கும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். பின்னர் பிற்பகல் 2:30 மணிக்கு ஜெய்ப்பூர் புறப்படுகிறார்.
ராஜஸ்தானின் ஜோத்பூர் மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு உரையாற்றினார். பாஜக உயர்மட்ட தலைவர்களின் இந்த வருகையால் ராஜஸ்தானில் வரவிருக்கும் சட்டபேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
மோடி அரசு பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மேவார், மார்வார் மற்றும் பிரஜ் ஆகிய காங்கிரஸ் வலிமைபெற்ற பகுதிகளில் பாஜக தனது வலிமையை நிரூபிப்பதற்காக பாஜகவின் முக்கிய தலைவர்கள் ராஜஸ்தான் நோக்கி படையெடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...