பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தில்லியில் பலத்த காற்றுடன் லேசான மழை!

வழக்கத்திற்கு மாறாக வெப்பமான பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு தில்லியில் இன்று காலை திடீர் வானிலை மாற்றத்தால் பலத்த காற்று மற்றும் லேசான மழை பெய்தது.

News image
கோப்புப்படம்
Updated On :1 மார்ச் 2023, 4:06 pm

DIN

புதுதில்லி: தில்லியில் இன்று காலை திடீர் வானிலை மாற்றத்தால் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது.

தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று கணித்திருந்தது. இந்த நிலையில் இன்று (மார்ச் 1) காற்றுடன் மழை பெய்தது தில்லி மக்களை மகிழ்ச்சியில் அழ்த்தியது.

தில்லி வடமேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் கடந்த 48 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைந்துள்ளது. இன்று அதிகபட்சமாக 32 டிகிரியும் குறைந்தபட்சமாக 14 டிகிரி வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி மாதத்தின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 27.7 டிகிரியாக இருந்தது. இது கடந்த 17 ஆண்டுகளில் அதிக வெப்பம் எனக் கருதப்படுகிறது. இந்த அசாதாரண வெப்பநிலைக்கு மழை இல்லாததே காரணம் என்று வானிலை வல்லுநர்கள் கூறியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.