எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஜி-20 மாநாட்டுக்காக வைக்கப்பட்ட பூந்தொட்டிகள் மாயம்: வைரலான விடியோ

ஜி-20 மாநாட்டுக்காக, சாலைகளை அலங்கரிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகள் மாயமான வழக்கில், 50 வயது முதியவரை குருகிராம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

News image
ஜி-20 மாநாட்டுக்காக வைக்கப்பட்ட பூந்தொட்டிகள் மாயம்: வைரலான விடியோ
Updated On :1 மார்ச் 2023, 9:36 am

DIN

ஜி-20 மாநாட்டுக்காக, சாலைகளை அலங்கரிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகள் மாயமான வழக்கில், 50 வயது முதியவரை குருகிராம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவரிடமிருந்து விலைஉயர்ந்த கார் மற்றும் திருடப்பட்ட தொட்டிச் செடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறையினர்  பேசுகையில், மன்மோகன் என்ற 50 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சாலைகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளைத் திருடிச் சென்றக் குற்றத்துக்காக அவர் கது செய்யப்பட்டுள்ளார். அவரது விலைஉயர்ந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

ஷங்கர் சௌக் பகுதியில் நடைபெறும் ஜி20 மாநாட்டை முன்னிட்டு, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை, விலை உயர்ந்த காரில் வந்த இருவர், காரின் பின் பக்கத்தில் ஏற்றிச் சென்ற விடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

இது குறித்து குருகிராம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஹரியாணா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதைக் கொண்டு 50 வயது நபர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.