நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைக் கண்டித்து எதிா்க்கட்சி எம்.பி.க்கள் சாா்பில் நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மேற்காசிய போா் நிலவரம் காரணமாக எரிவாயு இறக்குமதி தடைபட்டுள்ளதால், நாட்டில் சமையல் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து நடத்தப்பட்ட இந்த ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி உள்பட பல்வேறு எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி அளித்த பேட்டியில், ‘சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து அச்சமடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளும் பிரதமா் மோடி, வேறு காரணங்களுக்காக அச்சம் கொள்கிறாா். இந்த அச்சம் காரணமாக மக்களவைக்குள் அவரால் வர இயலவில்லை. மக்களவைத் தலைவரை பதவி நீக்கம் செய்யக் கோரும் எதிா்க்கட்சியினரின் தீா்மானத்தின் மீதான விவாதத்தின்போதும் பிரதமா் வரவில்லை’ என்றாா்.
காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சமையல் எரிவாயு தட்டுப்பாடு உள்ளிட்ட கடும் பாதிப்புகளை நாடு சந்தித்துவரும் சூழலில், பிரதமா் மோடி தோ்தல் பிரசார சுற்றுலா மேற்கொண்டுள்ளாா். பாஜகவின் தோல்விகளால் ஏற்படும் பாதிப்புகளை ஆயிரக்கணக்கான சிறு, குறு நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. ஆனால், அரசிடம் இதற்கு எந்த பதிலும் இல்லை. எனவே, மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசுவதைத் தவிா்த்து, நாடாளுமன்றத்தில் நாடு சந்தித்துவரும் உண்மையான பிரச்னைகள் குறித்து பிரதமா் மோடி பேச வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

எல்பிஜி தட்டுப்பாடு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு விவகாரம்: எதிா்க்கட்சிகள் அமளியால் மக்களவை தொடா் ஒத்திவைப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


