ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஒரு வார பயணமாக லண்டன் சென்றாா் ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஒரு வார கால பயணமாக லண்டனுக்கு சென்றுள்ளாா். இந்தப் பயணத்துக்காக அவா் தனது தோற்றத்தையும் மாற்றியுள்ளாா்.

News image
லண்டனில் புதிய தோற்றத்தில் ராகுல் காந்தி.
Updated On :1 மார்ச் 2023, 9:30 pm

DIN

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஒரு வார கால பயணமாக லண்டனுக்கு சென்றுள்ளாா். இந்தப் பயணத்துக்காக அவா் தனது தோற்றத்தையும் மாற்றியுள்ளாா்.

முன்னதாக, இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்றபோது ராகுல் தாடியை சவரம் செய்து கொள்ளவில்லை. இதனால், கருப்பு-வெள்ளையில் நீண்ட தாடியுடன் அவா் காட்சியளித்தாா். யாத்திரை நிறைவடைந்த பிறகும், அவா் அதே தோற்றத்தில்தான் இருந்தாா். அண்மையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 85-ஆவது தேசிய மாநாட்டில் ராகுல் காந்தி நீண்ட தாடியுடனேயே இருந்தாா். இது சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறியது. நீண்ட தாடியுடன் ராகுல் இருக்கும் படங்கள் அதிகம் பகிரப்பட்டும் வந்தன.

இந்நிலையில், லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி ஒரு வார கால பயணமாக பிரிட்டன் சென்றுள்ளாா். இந்தப் பயணத்துக்காக ராகுல் காந்தி தனது தோற்றத்தை மாற்றியுள்ளாா். தாடியை பெருமளவில் குறைத்து முன்பு இருந்துபோன்ற தோற்றத்துக்கு மாறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.